2026 மத்திய பட்ஜெட் தாக்கல்.. ஒற்றை அறிவிப்பால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
- பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
- சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும்.
2026-27 நிதியாண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.
இந்தாண்டு தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டத்தை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார். மேலும் பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டில், பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர்.
எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 300 புள்ளிகள் வரை சரிந்தது.
தற்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1060 புள்ளிகள் சரிந்து 81,506 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 389 புள்ளிகள் சரிந்து 25,029 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.