Union Budget 2026: மருத்துவ படிப்பு கல்வி கடனுக்கான வரி குறைப்பு- மேலும் பல முக்கிய அறிவிப்புகள்
- ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும்.
- மோட்டார் வாகன விபத்தில் கிடைக்கும் இழப்பீட்டிற்கு வரி கிடையாது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் 2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :-
* ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும்.
* வருமான வரித்தாக்கலுக்கான அவகாச மார்ச் 31 வரை நீட்டிப்பு.
* உள்நாட்டு உற்பத்திக்கு எதிரான கடன் அளவு 55.6 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* நிதிப்பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வருவேன்ற என்ற வாக்குறுதி நிறைவேற்றம்.
* மாநிலங்களுக்கான மானியமாக ரூ.1.4 லட்சம் கோடி கொடுக்கப்படும்.
* மோட்டார் வாகன விபத்தில் கிடைக்கும் இழப்பீட்டிற்கு வரி கிடையாது.
* பாரத் விஸ்தார் என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஏ.ஐ. கருவி வழங்கப்படும்.
* மருத்துவ படிப்பு கல்வி கடனுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் ஆக குறைப்பு.
* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களுக்கான வரி குறைக்கப்படும்.