இந்தியா

டெல்லியில் ராகுல் காந்தி நடைபயணத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன்

Published On 2022-12-18 10:29 GMT   |   Update On 2022-12-18 10:29 GMT
  • வரும் 24ம் தேதி அன்று ராகுல் காந்தி பாதயாத்திரையை டெல்லியில் தொடங்க உள்ளார்.
  • பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை நேற்று 100-வது நாளை எட்டியது.

வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானுக்குள் இந்த யாத்திரை நுழைந்திருக்கிறது.

நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை நேற்று 100-வது நாளை எட்டியது. இது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது.

இந்நிலையில், வரும் 24ம் தேதி அன்று ராகுல் காந்தி பாதயாத்திரையை டெல்லியில் தொடங்க உள்ளார். இந்த பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News