இந்தியா

தெலுங்கானாவில் கனமழை- சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி

Published On 2022-07-09 05:47 GMT   |   Update On 2022-07-09 05:47 GMT
  • தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • தெலுங்கானாவில் உள்ள 14 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் பெண்ணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொமரம் பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல், நிர்மல், நிஜாமாபாத், முழுகு, பத்ராத்ரி கொத்தகுடெம், மஹர்பூபாபாத், வாரங்கள் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இந்நிலையில் மழை காரணமாக ஐதராபாத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஒடிசா- வட ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அப்பால் வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சியின் காரணமாக சராசரி கடல் மட்டத்தில் இருந்து 7.6 கி.மீ வரை நீண்டு தென்மேற்கு நோக்கி நகர்கிறது.

மேலும், அண்டை மாநிலமான கர்நாடகாவின் 13 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News