இந்தியா
பஞ்சாப்பில் அதிர்ச்சி சம்பவம்- ஆட்டோவுக்கு காத்திருந்த சிறுமியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை
- ஓடும் காரில் மர்ம நபர்கள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்தனர்.
- சண்டிகரில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் மொகாலி ஜிராஜ்பூரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 16 வயது சிறுமி வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் வேலை முடிந்து சண்டிகர்- அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மால் அருகே ஆட்டோவுக்காக காத்து இருந்தார்.
அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர் ஓடும் காரில் மர்ம நபர்கள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்தனர்.
பின்னர், சண்டிகரில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் கடத்தப்பட்ட இடத்திலேயே அந்த சிறுமியை விட்டு சென்றனர்.
இது குறித்து சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.