இந்தியா

சண்டிகருக்கு தனி ஆளுநர்.. மத்திய அரசின் திட்டத்துக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எதிர்ப்பு

Published On 2025-11-23 11:37 IST   |   Update On 2025-11-23 11:53:00 IST
  • அடுத்த கூட்டத்தொடரில் புதிய மசோதா கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் உள்ளது.

பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக  சண்டிகர் யூனியன் பிரதேசம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சண்டிகருக்கு தனியாக துணைநிலை ஆளுநரை நியமிக்கும் வகையில் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்  131வது அரசியலமைப்பு திருத்தம் மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

அரியானாவில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. இரு மாநிலங்களுக்கும் தனித்தனியே ஆளுநர்கள் உள்ளனர். தற்போது சண்டிகர் யூனியன் பிரதேசம் பஞ்சாப் ஆளுநரால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்நிலையில் பஞ்சாப் ஆளுநாரால் நிர்வகிக்கப்பட்டுவரும் சண்டிகருக்கு, துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டால், தலைநகர் மீதான உரிமைகள் நீர்த்துப்போகச் செய்யும் என ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சண்டிகருக்கு தனியே துணை நிலை ஆளுநரை பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது ஒரு கடுமையான அநீதி என்றும், பஞ்சாபின் தலைநகரைப் அபகரிக்க பாஜக சதி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், இது பஞ்சாபின் அடையாளம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைத் தாக்குகிறது என்றும் கூட்டாட்சி கட்டமைப்பைப் பிளவுபடுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். சண்டிகர் பஞ்சாபிற்குச் சொந்தமானது, அது பஞ்சாபுடனேயே இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Tags:    

Similar News