இந்தியா
செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஜூலை 10-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
- சுப்ரீம் கோர்ட்டில் பலமுறை செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வேறு வழக்குகளில் ஆஜராவதால் அமலாக்கத்துறை சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் பலமுறை அவரது ஜாமின் மனு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வேறு வழக்குகளில் ஆஜராவதால் அமலாக்கத்துறை சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் ஜூலை 10-ந்தேதிக்கு ஜாமின் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தது.