இந்தியா
தெருவில் சென்ற இளம்பெண்ணை வீட்டுக்குள் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சிறைக் காவலர்கள்
- இருவரும் குடியிருப்பு வளாகத்திற்குள் பெண்ணை தரதரவென இழுத்து சென்றனர்.
- அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் வீடு இல்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது
அசாமில் ஸ்ரீபூமி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறையருகே சிறை காவலர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் சிறை காவலர்களான ஹரேஷ்வர் கலிதா (45) மற்றும் கஜேந்திரா கலிதா (50) ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 1.30 மணியளவில் அவ்வழியே சென்ற இளம்பெண்ணை அவர்கள் இருவரும் குடியிருப்பு வளாகத்திற்குள் தரதரவென இழுத்து சென்றனர்.
அந்த பெண் கூச்சலிட்டும் அவர்கள் விடவில்லை. இதன்பின்பு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது, அந்த வழியே போலீசார் ரோந்து பணிக்காக வந்துள்ளனர்.
அவர்கள் சிறை காவலர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் வீடு இல்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது