என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறைக் காவலர்கள்"

    • இருவரும் குடியிருப்பு வளாகத்திற்குள் பெண்ணை தரதரவென இழுத்து சென்றனர்.
    • அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் வீடு இல்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது

    அசாமில் ஸ்ரீபூமி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறையருகே சிறை காவலர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் சிறை காவலர்களான ஹரேஷ்வர் கலிதா (45) மற்றும் கஜேந்திரா கலிதா (50) ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 1.30 மணியளவில் அவ்வழியே சென்ற இளம்பெண்ணை அவர்கள் இருவரும் குடியிருப்பு வளாகத்திற்குள் தரதரவென இழுத்து சென்றனர்.

    அந்த பெண் கூச்சலிட்டும் அவர்கள் விடவில்லை. இதன்பின்பு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது, அந்த வழியே போலீசார் ரோந்து பணிக்காக வந்துள்ளனர்.

    அவர்கள் சிறை காவலர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் வீடு இல்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • அரசு இதற்காக இப்போது ரூ.3 கோடியே 24 லட்சத்து 32 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் பணிபுரியும் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம், காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஏற்கனவே சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இதுபற்றி சட்டசபையில் அறிவித்திருந்த நிலையில், அரசு இதற்காக இப்போது ரூ.3 கோடியே 24 லட்சத்து 32 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    ×