இந்தியா
நவராத்திரி முதல் நாளில் இந்தியர்களுக்கு கிடைத்த இனிப்பே ஜிஎஸ்டி சீர்திருத்தம்: பிரதமர் மோடி
- புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் என்பது மக்களின் சேமிப்பு திருவிழா ஆகும்.
- ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கையால் நடுத்தர மக்கள், இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்றார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக இன்று மாலை உரையாற்றி வருகிறர். அப்போது அவர் கூறியதாவது:
நவராத்திரி முதல் நாளில் இந்தியர்களுக்கு கிடைத்த இனிப்பு ஜிஎஸ்டி சீர்திருத்தம்.
ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கையால் நடுத்தர மக்கள், விவசாயிகள், இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் என நம்புகிறேன்.
வரிகுறைப்பு நடவடிக்கை முதலீடுகளை ஊக்குவித்து வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்,
புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் என்பது மக்களின் சேமிப்பு திருவிழா.
தீபாவளி பண்டிகைக்கான இனிப்புகளாக ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமையும் என தெரிவித்தார்.