இரண்டு நாள் பயணமாக மலேசியா செல்கிறார் பிரதமர் மோடி

வருகிற பிப்ரவரி 7 மற்றும் 8-ந்தேதி மலேசியாவில் சுற்றுப் பயணம் செய்கிறார்.தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.
இரண்டு நாள் பயணமாக மலேசியா செல்கிறார் பிரதமர் மோடி
Published on

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வருகிற சனிக்கிழமை மலேசியா செல்கிறார். இந்த சுற்றுப் பயணத்தின்போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த பயணத்தின்போது மலேசிய வாழ் இந்தியர்களுடன் உரையாடுகிறார்கள். அதேபோல் தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இந்த பயணத்தின்போது இந்தியா- மலேசியா சிஇஓ மன்றம் நிகழ்ச்சியும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்று, நாகரிக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளின் அடிப்படையில் இந்தியாவும் மலேசியாவும் நீண்டகால நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகின் 3-வது பெரிய நாடாக மலேசியாவில் 2.9 மில்லியன் பேர் கொண்ட இந்திய வம்சாவளியினர் இருப்பதும் இந்த உறவை மேலும் வலுப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com