இந்தியா

என்ஜினில் தீ: கொல்கத்தாவில் அவசரமாக தரையிறங்கிய துருக்கி ஏர்லைன்ஸ் விமானம்

Published On 2026-02-04 19:44 IST   |   Update On 2026-02-04 19:44:00 IST
  • காத்மாண்டில் இருந்து இஸ்தான்புல்லுக்கு விமானம் சென்று கொண்டிருந்தது.
  • விமானம் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தின் வலது என்ஜினில் தீப்பிடித்ததால், விமானி அபாய எச்சரிக்கை விடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்கியதால் பயணிகள் உயிர் தப்பினர். நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு துருக்கி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது.

திடீரென விமானத்தின் வலது என்ஜின் தீப்பிடித்து எரிவதாக விமானி அறிவித்தார். அதனைத்தொடர்ந்து விமானத்தில் இருந்து PAN PAN என சமிக்ஞை அனுப்பப்பட்டது. இதனால் விமானத்தை கொல்கத்தாவில் இறக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விமானம் கொல்கத்தாவில் பத்திரகமாக தரையிறங்கியது. விமானம் தரையிறங்குவதற்கு முன் முழு எமர்ஜென்சி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்து. இதில் எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை.

Similar News