இந்தியா
null

6 ஆம் கட்ட தேர்தல் : வாக்களித்த பின் செல்ஃபி எடுத்த ராகுல் காந்தி- சோனியா காந்தி

Published On 2024-05-25 05:17 GMT   |   Update On 2024-05-25 13:18 GMT
  • ராகுல் காந்தி, அவரது தாய் சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
  • ராகுல் காந்தி பிரச்சாரம் ஒன்றில், தான் டெல்லியில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பேன் என்றும் கெஜ்ரிவால் காங்கிரஸுக்கு வாக்களிப்பார் என்றும் கூறியிருந்தார்.

நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு முக்கிய தொகுதிகளில் 5 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளான இன்று (மே 25) டெல்லி, அரியானா, பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றில் உள்ள மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி காலை முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஜனாதிபதி திரௌபதி முர்மு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் டெல்லியில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இதைத்தொடர்ந்து இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, அவரது தாய் சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினர். பின் வாக்குச்சாவடிக்கு வெளியில் வந்த இருவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

Full View

முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும் ராகுல் காந்தி பிரச்சாரம் ஒன்றில், தான் டெல்லியில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பேன் என்றும் கெஜ்ரிவால் காங்கிரஸுக்கு வாக்களிப்பார் என்றும் கூறியிருந்தார்.

மேலும் ஒடிசா மாநில முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் இன்று தனது வாக்கினை செலுத்தினார். அதன்பின் பேசிய அவர், இளைஞர்கள் வாக்களிக்க ஆர்வமுடன் முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

Tags:    

Similar News