இந்தியா
77வது குடியரசு தின விழாவில் அணிவகுத்த "ஆபரேஷன் சிந்தூர்" வாகனங்கள்
- சக்திவாய்ந்த பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் அணிவகுத்தன.
- ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்கள், கருங்கழுகுகள், ஒட்டகங்கள் கடமைப்பாதையில் அணிவகுத்தன.
நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடமைப்பாதையில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
குடியரசு தினத்தை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதை அடுத்து அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதில், ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் குடியரசு தின விழாவில் அணிவகுத்தன.
சக்திவாய்ந்த பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் அணிவகுத்தன.
ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்கள், கருங்கழுகுகள், ஒட்டகங்கள் கடமைப்பாதையில் அணிவகுத்தன.
குடியரசு தினவிழாவில் 4 பைரவா மற்றும் சீக்கியர் படைப்பிரிவினர் கூட்டாக அணிவகுத்து சென்றனர்.