null
முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
- பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
- அடுத்தகட்ட நகர்வு குறித்து முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
பாகிஸ்தானின் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்த நிலையில் முப்படை தளபதிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கும் தலைமை தளபதி எல்லையில் உள்ள நிலவரம் குறித்தும் விளக்க உள்ளார். இரவு முழுவதும் நடந்த துப்பாக்கி சண்டை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முப்படை தளபதிகள் விளக்க உள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக கூறியிருந்த நிலையில் அடுத்தகட்ட நகர்வு குறித்து முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார்.
பாகிஸ்தான் தாக்குதல், பதில் தாக்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், தற்போதைய சூழல், சேதங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.