இந்தியா

வாக்குறுதிகளை நிறைவேற்ற சபதம் எடுங்கள்: ரேவந்த் ரெட்டிக்கு கே.டி. ராம ராவ் பதிலடி

Published On 2025-12-26 16:14 IST   |   Update On 2025-12-26 16:14:00 IST
  • சந்திரசேகர ராவ் குடும்பத்தை ஆட்சிக்கு வர விடமாட்டேன் என ரேவந்த் ரெட்டி சபதம்.
  • கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சபதம் எடுங்கள் எடுங்கள் என கே.டி. ராம ராவ் பதில் கொடுத்துள்ளார்.

தெலுங்கானா முதல்வராக இருக்கும் ரேவந்த் ரெட்டி, தான் அரசியலில் இருக்கும் வரை கே. சந்திரசேகர ராவ் குடும்பத்தை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டேன் என சபதம் செய்தார்.

இதற்கு சந்திரசேகர ராவ் மகன் கே.டி. ராம ராவ் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில் கூறியதாவது:-

நீங்கள் (ரேவந்த் ரெட்டி) கே. சந்திரசேகர ராவ் குடும்பத்தை ஆட்சிக்கு வர விடமாட்டேன் என சபதம் எடுத்தீர்கள். உங்களுக்கு அதிகமான திறமை இருந்தால், ஏழை பெண்களுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் ஒரு டோலா தங்க திட்டம் அமல்படுத்தப்படும் என சபதம் எடுங்கள். தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அவதூறாக பேசுவது முதல்வருக்கு பொருத்தமற்றது.

இவ்வாறு கே.டி. ராம ராவ் தெரிவித்தார்.

2023 சட்டசபை தேர்தலின்போது, ஏழை பெண்களுக்கு ஒரு டோலா தங்கம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

தற்போதை காங்கிரஸ் கட்சி ஆட்சியின் தோலை உரித்துவிடுவதாக சந்திரசேகர ராவ் மிட்டும் வகையில் பேசியிருந்தார். அதற்கு ரேவந்த் ரெட்டி கடுமையாக வகையில் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் கே.டி. ராம ராவ் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

Tags:    

Similar News