நாம் சாதியற்ற, சோசலிச இந்தியாவுக்காக பாடுபட வேண்டும்: டி. ராஜா
- பாசிச சக்திகள் அரசியல் அமைப்புகளைப் பிளவுபடுத்தும்போது, கம்யூனிஸ்டுகளால் எவ்வளவு காலம் நீடிக்க முடியும்?.
- பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 101-வது தொடக்க நாள் விழா நிகழ்ச்சி அக்கட்சியின் தலைமையகம் அஜய் பவனில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது டி. ராஜா கூறியதாவது:-
இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களை நாம் மிகவும் தீவிரமாகப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 100 வருடங்களில், கட்சி பல்வேறு பின்னடைவுகளை சந்தித்துள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கம் இன்று பிளவு பட்டு உள்ளது. இது எவ்வளவு நாளைக்கு தொடர முடியும்?. இடதுசாரி இயக்கம் பிளவு பட்டு நிற்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் நாம் போரிட்டு கொண்டிருந்தபோது, ஒன்றிணைந்து முயற்சி மேற்கொண்டோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், எவ்வளவு காலம் கம்யூனிஸ்ட் தொடர்ந்து இவ்வாறு இருக்கும்.
ஒரு அரசியல் கட்சியாக நாங்கள் இடதுசாரி ஒற்றுமைக்கு வேண்டுகோள் விடுத்து, தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகிறோம். நாங்கள் ஒன்றிணைப்பிற்கு அழைப்பு விடுக்கும்போது, மற்றவர்களும் தீவிர சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
பாசிச சக்திகள் அரசியல் அமைப்புகளைப் பிளவுபடுத்தும்போது, கம்யூனிஸ்டுகளால் எவ்வளவு காலம் நீடிக்க முடியும்?. பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். நாம் சாதியற்ற, சோசலிச இந்தியாவுக்காக பாடுபட வேண்டும்
இவ்வாறு டி. ராஜா பேசினார்.