இந்தியா

பிஜு ஜனதா தளம் அடுத்த 100 ஆண்டுகள் ஒடிசா மக்களுக்காக சேவையாற்றும்: நவீன் பட்நாயக்

Published On 2025-12-26 17:11 IST   |   Update On 2025-12-26 17:11:00 IST
  • பிஜு ஜனதா தளம் கட்சி பிளவு படும் என்று சிலர் மற்றும் சில கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன.
  • பிஜு ஜனதா தளம் ஒன்று அல்லது இரண்டு தலைவர்களை பற்றியது அல்ல.

ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக், தங்களுடைய கட்சி ஒடிசா மக்களுக்காக அடுத்த 100 ஆண்டுகள் சேவையாற்றும் எனத் தெரிவித்துள்ளார்.

நவீன் பட்நாயக்கின் தந்தையும், ஒடிசா முன்னாள் முதல்வருமான பிஜு பட்நாயக்கால் 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி பிஜு ஜனதா தளம் கட்சி தொடங்கப்பட்டது. இக்கட்சியின் 29-வது தொடக்க நாளான இன்று நவீன் பட்நாயக் கட்சி தலைவர்கள், தொண்டர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பிஜு ஜனதா தளம் கட்சி பிளவு படும் என்று சிலர் மற்றும் சில கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. இதுபோன்ற வதந்திகள் பரவி வருகின்றன. பிஜு ஜனதா தளம் ஒன்று அல்லது இரண்டு தலைவர்களை பற்றியது அல்ல. இதை நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். ஒடிசாவின் விருப்பம் மற்றும் பெருமையில் வேரூன்றிய மக்கள் இயக்கம். பிஜு ஜனதா தளம் ஒடிசா மக்களுக்காக அடுத்த 100 ஆண்டுகள் குரல் கொடுக்கும்.

தேர்தல் தோல்வி ஜனநாயகத்தின் ஒரு பகுதி. அரசியலில் அமைதி காப்பது மிகவும் முக்கியமானது. கட்சி தொண்டர்களின் கடின உழைப்பு, கமிட்மெண்ட் ஆகியவற்றில் நான் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளேன். வலுவான ஒடிசாவை எழுப்ப இன்றைய சவால்களை நாளையை வாய்ப்புமாக மாற்ற எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும்.இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

Tags:    

Similar News