இந்தியா

அறிவியலுக்கும், ஆன்மீகத்திற்கும் இடையே முரண்டுபாடு இல்லை: மோகன் பகவத்

Published On 2025-12-26 17:51 IST   |   Update On 2025-12-26 17:51:00 IST
  • உண்மைகளை நிலைநாட்டுவதற்காக அறிவியல் பரிசோதனை மற்றும் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய அனுபவங்களைச் சார்ந்துள்ளது.
  • ஆன்மீகம் உள்அனுபவங்களை மூலம் அதே கொள்கையை பின்பற்றுகிறது.

திருப்பதியில் நடைபெற்ற பாரதிய அறிவியல் சம்மேளனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அறிவியலுக்கும் ஆன்மீகம் அல்லது தர்மத்திற்கு இடையில் முரண்டுபாடு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மோகன் பகவத் கூறியதாவது:-

தர்மம் மதம் அல்ல. இது படைப்புகள் இயங்குவதற்கான விதியாகும். இதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் இதற்கு வெளியே யாராலும் இயங்க முடியாது. தர்மத்தில் உள்ள சமநிலையின்மை அழிவுக்கு வழிவகுக்கும்.

அறிவியல் ஆய்வில் தர்மத்திற்கு இடமில்லை என்ற அனுமானத்தின் காரணமாக, அறிவியல் வரலாற்று ரீதியாக தர்மத்திலிருந்து விலகியே இருந்தது. அத்தகைய நிலைப்பாடு அடிப்படையில் தவறானது.

அறிவியலுக்கும் தர்மத்திற்கும் அல்லது ஆன்மீகத்திற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. அணுகுமுறைகள் வேறுபடலாம். ஆனால் இலக்கு ஒன்றேதான். அது உண்மையை அறிவது.

உண்மைகளை நிலைநாட்டுவதற்காக அறிவியல் பரிசோதனை மற்றும் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய அனுபவங்களைச் சார்ந்துள்ளது. ஆன்மீகம் உள்அனுபவங்களை மூலம் அதே கொள்கையை பின்பற்றுகிறது. நேரடி அனுபவத்தை வலியுறுத்துகிறது. மேலும், அனுபவிக்கப்படும் எதுவாக இருந்தாலும், அது அனைவராலும் அடையக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

Tags:    

Similar News