இந்தியா

அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்?

Published On 2025-05-09 13:53 IST   |   Update On 2025-05-09 13:53:00 IST
  • எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
  • இந்திய ராணுவத்துக்கு உதவும் வகையிலான படை வீரர்களை ராணுவ தளபதி வழி நடத்துவார் என்று கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை முப்படைகள் முறியடித்து வருகின்றனர். இருப்பினும் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தானுடன் மோதல் அதிகரிக்கும் நிலையில் ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பகுதிநேர தன்னார்வலர்கள் கொண்ட படையையும், இந்திய ராணுவத்துக்கு உதவும் வகையிலான படை வீரர்களை ராணுவ தளபதி வழி நடத்துவார் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News