இந்தியா

ஆந்திராவில் இன்று அதிகாலை கார்-பஸ் மீது மோதி பக்தர்கள் 4 பேர் பலி

Published On 2025-12-26 09:48 IST   |   Update On 2025-12-26 09:48:00 IST
  • விபத்தில் காரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
  • இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 6 பேர் காரில் திருப்பதி வந்தனர். திருப்பதியில் தரிசனம் செய்து விட்டு நேற்று இரவு ஐதராபாத் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் நல்லகட்லா-பட்டலூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கார் சென்று கொண்ருடிந்தது.

அப்போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி எதிர் திசையில் சாலையில் கார் அந்தரத்தில் பாய்ந்தது. ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பஸ் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களையும், இறந்தவர்களின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நந்தியால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News