இந்தியா
பாரத ரத்னா வாஜ்பாய் பிறந்தநாள்: மணல் சிற்பம் வரைந்து அஞ்சலி செலுத்திய கலைஞர்
- பாரத ரத்னா விருது பெற்ற அடல் பிகாரி வாய்பாயின் 101வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
- ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் வாஜ்பாய் மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இதற்கிடையே, முன்னாள் பிரதமரான பாரத ரத்னா விருது பெற்ற அடல் பிகாரி வாய்பாயின் 101வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பத்தை உருவாக்கி அஞ்சலி செலுத்தினார்.