இந்தியா

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து

Published On 2025-12-26 04:14 IST   |   Update On 2025-12-26 04:14:00 IST
  • அடுக்குமாடி குடியிருப்பின் 16-வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
  • கரும்புகை பரவியதால் அங்கிருந்த பலர் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அந்தேரி வீராதேசாய் ரோடு பகுதியில் 22 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது.

நேற்று காலை10 மணியளவில் இந்தக் கட்டிடத்தின் 16-வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மாடிகளில் கரும்புகை பரவியது. அங்கிருந்த பலர் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மாடி படிக்கட்டுகளில் சிக்கித் தவித்த 40 பேரை பத்திரமாக மீட்டனர்.மின் வயர்கள், பொருட்கள் எரிந்து நாசமாகின. ஒன்றரை மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்திற்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News