இந்தியா

டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்- லைவ் அப்டேட்ஸ்..

Published On 2025-02-08 07:45 IST   |   Update On 2025-02-08 22:12:00 IST
2025-02-08 05:56 GMT

டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. 41 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 29 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

2025-02-08 05:48 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 30,182 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 6,122 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

2025-02-08 05:45 GMT

டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி 2800 வாக்குகள் பின்னடைவு. பா.ஜ.க.வின் ரமேஷ் பிதூரி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

2025-02-08 05:40 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளதால் அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து தி.மு.க.வினர் கொண்டாட்டம்.

2025-02-08 05:37 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 29,391 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 4,216 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

2025-02-08 05:30 GMT

சட்டசபை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் 300 வாக்குகள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால் பின்னடைவு. 6 சுற்றுகள் முடிவில் 300 வாக்குகள் பின்தங்கினார்.

2025-02-08 05:17 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 27,642 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 4,107 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

2025-02-08 04:52 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 25,241 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3,977 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

2025-02-08 04:51 GMT

கல்காஜி தொகுதியில் டெல்லி முதலமைச்சர் அதிஷி முன்னிலை. பா.ஜ.க. வேட்பாளரை விட சுமார் ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Tags:    

Similar News