என் மலர்
இந்தியா

டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்- லைவ் அப்டேட்ஸ்..
- டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - நாம் தமிழர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படவுள்ளன.
Live Updates
- 8 Feb 2025 5:19 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சீதாலட்சுமி 23,872 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
- 8 Feb 2025 4:32 PM IST
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னிலை பெற்ற 48 இடங்களில் 40ல் வெற்றி- 8 இடங்களில் தொடர்ந்து பாஜக முன்னிலையில் உள்ளது.
ஆம் ஆத்மி 17 இடங்களில் வெற்றி- 5 இடங்களில் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 8 Feb 2025 4:29 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 15 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இதில், 15வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,02,544 வாக்குகள் பெற்றார்.
- 8 Feb 2025 3:17 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில் 50 வழுக்காட்டிற்கும் அதிக வாக்குகளை பெற்று திமுக முன்னிலையில் உள்ளது.
எண்ணப்பட வேண்டிய வாக்குள் 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதால் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
- 8 Feb 2025 3:10 PM IST
டெல்லி தலைமை செயலகத்தில் இருந்து ஆவணங்கள், மின்னணு கோப்புகள், ஹார்டு டிஸ்க்குகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் பொது நிர்வாகத்துறை திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 8 Feb 2025 3:05 PM IST
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியளித்த டெல்லி மக்களுக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லி தேர்தலில் வெற்றி பெற உழைத்த பாஜக தொண்டர்கள் அனைவரையும் நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.
டெல்லியில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை பாஜக அரசு உறுதிசெய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.











