என் மலர்
இந்தியா

டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்- லைவ் அப்டேட்ஸ்..
- டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - நாம் தமிழர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படவுள்ளன.
Live Updates
- 8 Feb 2025 2:34 PM IST
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறேன் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
- 8 Feb 2025 1:56 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. 48 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
- 8 Feb 2025 1:48 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 61,739 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 13,443 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
- 8 Feb 2025 1:45 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 48 ஆயிரத்து 296 வாக்குகள் முன்னிலை. 9 சுற்றுகள் முடிவில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 61,739 வாக்குகள் பெற்றுள்ளார்.
நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி 13 ஆயிரத்து 443 வாக்குகள் பெற்றுள்ளார்.
- 8 Feb 2025 1:38 PM IST
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். டெல்லி மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாக வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
- 8 Feb 2025 1:35 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 55,905 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 12,028 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
- 8 Feb 2025 1:09 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 50,251 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 11,685 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
- 8 Feb 2025 1:06 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. 47 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 23 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.















