இந்தியா

VIDEO: திருமண விழாவில் 'கியூ ஆர்' கோடு மூலம் 'மொய்' வசூலித்த ருசிகரம்

Published On 2025-10-31 09:33 IST   |   Update On 2025-10-31 09:33:00 IST
  • திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தங்களது மொய்ப்பணத்தை செலுத்தினர்.
  • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் திருமண விழாக்கள் பாரம்பரிய முறைப்படி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நடைபெறும் ஏற்பாடுகளை வித்தியாசமாக மேற்கொள்ளும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. திருமண அழைப்பிதழ் அச்சடிப்பதிலும், ஆடைகளை வடிவமைப்பதிலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமைகளை புகுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கேரளாவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நடைபெற்ற மொய் விருந்தில் கியூ ஆர் கோடு மூலம் பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மணமக்களின் உறவினர் ஒருவர் ஆன்லைன் பணபரிவர்த்தனைக்கான கியூ ஆர் கோடு பொறித்த அட்டையை தனது சட்டைப்பையில் ஒட்டி இருந்தார். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தங்களது மொய்ப்பணத்தை செலுத்தினர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.



Tags:    

Similar News