இந்தியா

கெஜ்ரிவால்

ம.பி. சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி - கெஜ்ரிவால்

Published On 2023-03-14 21:07 GMT   |   Update On 2023-03-14 21:07 GMT
  • மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
  • மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.

போபால்:

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய பிரதேசத்தில் 20 ஆண்டுகளாக அவர்கள் (பா.ஜ.க.வினர்) ஆட்சி செய்தனர். அவர்களுக்கு மாற்றாக ஆம் ஆத்மி வந்துள்ளது. அடுத்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. பிரச்சனைகளை எதிர்கொள்ளும். ஆம் ஆத்மியைப் பார்த்து மோடிஜி (பிரதமர்) அச்சமடைந்து உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும்.

டெல்லியில் கல்வி பிரிவில் ஆம் ஆத்மி கட்சி புரட்சி செய்துள்ளது. எந்தவொரு கட்சியும், உங்களது குழந்தைகளுக்கு கல்வி வாக்குறுதி அளித்து வாக்கு கேட்கவில்லை. அவர்களுக்கு அதில் விருப்பமும் இல்லை.

டெல்லி, பஞ்சாப் போன்று மத்திய பிரதேசத்திலும் இலவச மின்சாரம் வழங்கப்படும். மொஹல்லா கிளினிக்குகளை தொடங்கி இலவச சிகிச்சை அளிக்கப்படும். எங்களுக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்திற்கு வர ஒரு வாய்ப்பு வழங்குங்கள். நாங்கள் கூறியவற்றை செய்யவில்லை எனில், அடுத்து வாக்கு கேட்டு உங்களிடம் நான் வரமாட்டேன்.

ஒருவர் அரசியல் பேரம் பேசி எம்.எல்.ஏ.வை வாங்குகிறார்கள் என கூறுவார்கள். மற்றொருவர் எம்.எல்.ஏ.வை வாங்க தயாராவார்கள். மொத்த தேர்தல் நடைமுறையையே அவர்கள் மாற்றி வைத்துள்ளனர். அரசியலமைப்பையே சந்தைகடையாக ஆக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News