கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் 8 பேர் பின்னடைவில் உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.
கர்நாடக தேர்தல் முடிவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையும் ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஆரம்ப நிலையிலேயே காங்கிரஸ் பெரும்பான்மையான 113 இடங்களைக் கடந்து முன்னிலையில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 122 இடங்களிலும், பாஜக 78 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
குமாரசாமியின் ஜேடி(எஸ்) கட்சி காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னால் இருந்து வருகிறது. ஜனதா தளம் (எஸ்) இதுவரை 24 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பெற்றாலும் தொங்கு சட்டசபையை சந்திக்க நேரிடும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் நிராகரித்துள்ளார். மேலும் அவர், " கட்சி குறைந்தபட்சம் 141 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்றார்.
பாஜக சார்பில் போட்டியிட்ட முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் உள்ளார்.
கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டி.கே.சிவக்குமார் முன்னிலையில் உள்ளார்.
வாக்கு எண்ணிக்கையில் இதுவரை காங்கிரஸ் 104 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து பா.ஜ.க 83 தொகுதிகளிலும், ம.ஜ.த 18 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.