null
ராகுல் காந்தி பிறந்தநாள்.. நேரில் வாழ்த்து தெரிவித்த விஜய் வசந்த் எம்.பி.
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- ராகுல் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மாநகர மகளிர் காங்கிரஸ் சார்பில் ஏழைகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியை விஜய் வசந்த் துவங்கி வைத்தார்.
சென்னை:
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு கட்சி தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் ராகுல் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மாநகர மகளிர் காங்கிரஸ் சார்பில் ஏழைகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியை விஜய் வசந்த் துவங்கி வைத்தார்.
இதனையடுத்து மக்களின் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதில் மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ரத்ததான நிகழ்ச்சியை விஜய் வசந்த் துவங்கி வைத்தார்.
முன்னதாக, நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆளூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் தேவை என்ற பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 11.8 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இன்று அங்கன்வாடி கட்டிடம் சிறுவர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.