இந்தியா

பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்யவேண்டும் - கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

Published On 2023-09-22 23:23 IST   |   Update On 2023-09-22 23:23:00 IST
  • பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்கு உரியது.
  • எனவே அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் எம்.பி. குறித்து பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்யக் கோரி மக்களவை சபாநாயகருக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கும், ஜனநாயகத்திற்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார். ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்கு உரியது. அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News