இந்தியா

போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது ஏன்?: பிரதமரை சாடிய காங்கிரஸ்

Published On 2025-05-14 20:09 IST   |   Update On 2025-05-14 20:09:00 IST
  • இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது.
  • இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் அறிவித்தார் என கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது.

இது முதல் முறையாக நடக்கிறது. பிரதமர் மோடி இது குறித்து எதுவும் கூறவில்லை.

அமெரிக்காவின் பங்கு மிகவும் முக்கியமானது, அவர்களால்தான் இந்தப் போர் நின்றது என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகிறார். வெளியுறவு மந்திரி டாக்டர் ஜெய்சங்கர் இதற்குப் பதிலளிக்கவில்லை.

அமெரிக்காவின் பங்கு என்ன என்பது குறித்து பிரதமர் மோடியும், வெளியுறவு மந்திரியும் இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை என நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News