இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியை கைது செய்த போலீஸ் மீது தாக்குதல் நடத்திய கும்பல்- 6 பேர் காயம்

Published On 2026-01-03 16:04 IST   |   Update On 2026-01-03 16:04:00 IST
  • மீன் வளர்ப்புக்காக நீர்நிலைகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு.
  • போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றியபோது, கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தபோது, கும்பல் ஒன்று போலீசார் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 6 போலீசார் காயம் அடைந்தனர்.

வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி பகுதியைச் சேர்ந்த போயர்மாரி கிராமத்தில், நேற்றிரவு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி மூசா மொல்லாவை கைது செய்ய போலீசார் சென்றனர். போலீசார் கைது செய்து செய்து முசாவை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.

அப்போது, ஒரு கும்பல் திடீரென போலீசார் மீதும், போலீஸ் வாகனம் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 போலீசார் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கூடுதல் படை வரவழைக்கப்பட்டு, நிர்வாகியை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மீன் வளர்ப்புக்காக அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை வலுக்கட்டாயமாக அபகரித்த குற்றச்சாட்டின் பேரில் போலீசார் மூசா மொல்லாவை கைது செய்துள்ளனர். கும்பல் தாக்குதலை தூண்டியதற்கான பஞ்சாயத்து தலைவர் உள்பட மேலும், இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2024-ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஷாஜகான் வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்றபோது மர்மக்கும்பல் ஒன்று அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News