இந்தியா

டிஜிட்டலில் புரட்சி செய்துள்ளது - இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் பாராட்டு

Published On 2026-02-19 11:44 IST   |   Update On 2026-02-19 11:44:00 IST
  • பிரதமர் மோடி நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
  • நாங்கள் இருவரும் இந்தப் புரட்சியை நம்புகிறோம்.

டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியதாவது:-

பிரதமர் மோடி நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அற்புதமான நாட்டில், இந்த அற்புதமான நகரத்திற்கு எங்களை வரவேற்றதற்கு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஒரு தெரு வியாபாரி வங்கிக்கணக்கை திறக்க முடியவில்லை. முகவரி இல்லை, ஆவணங்கள் இல்லை. இன்று அதே விற்பனையாளர் தனது தொலைபேசியில் பணம் செலுத்துகிறார்.

உலகில் வேறு எந்த நாடும் உருவாக்காத ஒன்றை இந்தியா உருவாக்கியுள்ளது. 140 கோடி மக்களுக்கான டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்கி இருக்கிறது. தற்போது ஒவ்வொரு மாதமும் ரூ.2 ஆயிரம் கோடி பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் ஒரு கட்டண முறை செயல்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கோடிக்கணக்கான மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் கொண்டு வர முடியாது என்று உலகம் இந்தியாவிடம் கூறியது. ஆனால் அது தவறு என்று இந்தியா நிரூபித்துள்ளது.

விரைவாக புதுமைகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவு நமது மனித குலத்திற்கு உதவும் என்று நாங்கள் கூறி வருகிறோம். நாங்கள் இருவரும் இந்தப் புரட்சியை நம்புகிறோம்.

செயற்கை நுண்ணறிவு ஒரு முக்கிய துறையாக மாறியுள்ளது. இந்த பெரிய தொழில்நுட்பம் இன்னும் பெரியதாகிவிட்டது. செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் புதுமை மற்றும் பொறுப்புணர்வு, தொழில் நுட்பத்தை மனிதநேயத்துடன் இணைப்பவர்களால் கட்டமைக்கப்படும். இந்தியாவும் பிரான்சும் இந்த எதிர்காலத்தை ஒன்றாக வடிவமைக்க உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News