சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த உ.பி. போலீசார்
- சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை போலீசார் தேடிவந்தனர்.
- போலீசார் பதுங்கி இருந்த இடத்திற்கு சென்றபோது துப்பாக்கிச்சூடு.
உத்தர பிரதேசத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அம்ஜத் கான் (வயது 35) என்பவரை போலீசார் தேடிவந்தனர்.
அம்ஜத் கான் பதுங்கி இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த இடத்திற்கு சென்றனர். அப்போது, போலீசார் தன்னை நெருங்கியதை அறிந்த அம்ஜத் கான், போலீசார் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட தொடங்கினான்.
இதனால் போலீசார் தங்களை பாதுகாக்க பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அம்ஜத் கான் காலில் குண்டு பாய்ந்தது. குண்டு தாக்கி சுருண்டு விழுந்த அம்ஜத் கானை போலீசார் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அம்ஜத் கானிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.