இந்தியா

ஆந்திராவில் நல்லாட்சி மேம்படுத்தப்படும்: ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

Published On 2024-05-16 05:45 GMT   |   Update On 2024-05-16 05:45 GMT
  • ஆந்திராவில் அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகியுள்ளது.
  • கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களை பாராட்டுகிறேன்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் வாக்கு பதிவு நடந்தது. இதில் அதிகபட்சமாக 81.86 சதவீதம் வாக்குகள் பதிவானது.

அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்காளர்க ளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதில் அனைத்து முதியோர்கள், சகோதரிகள், சகோதரர்கள், விவசாயிகள், சிறுபான்மையின சகோதரர்கள், குறிப்பாக கோடை வெயிலைத் தாங்கிக்கொண்டு பெருமளவில் வந்து வாக்களித்த இளைஞர்களுக்கு நன்றி.

கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களை பாராட்டுகிறேன்.

இன்று வரை காணப்படும் நல்லாட்சியும் திறமையான நிர்வாகமும் மேலும் மேம்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஆந்திராவில் அதிகபட்ச மாக வாக்குகள் பதிவாகியுள்ளது சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நல்லாட்சி நிர்வாகம் மேம்படுத்தப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பது அவரது கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News