இந்தியா

ஆஸ்பத்திரியில் இளம்பெண் மயக்க ஊசி போட்டு பாலியல் வன்கொடுமை- உ.பி.யில் அதிர்ச்சி

Published On 2025-07-28 08:04 IST   |   Update On 2025-07-28 08:04:00 IST
  • மயக்கம் தெளிந்தபோது தனக்கு நேர்ந்த கொடூரத்தை அந்தப்பெண் உணர்ந்து கொண்டார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆஸ்பத்திரி ஊழியர் யோகேஷ் பாண்டேவை கைது செய்தனர்.

உத்தரபிரதேசத்தின் பல்ராம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் 28 வயதான இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு நோய்க்கான ஊசி எனக்கூறி, யோகேஷ் பாண்டே என்ற ஊழியர் மயக்க ஊசி போட்டுள்ளார்.

இதனால் மயக்கமடைந்த அந்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டார். பின்னர் மயக்கம் தெளிந்தபோது தனக்கு நேர்ந்த கொடூரத்தை அந்தப்பெண் உணர்ந்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆஸ்பத்திரி ஊழியர் யோகேஷ் பாண்டேவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

நோய்க்கு சிகிச்சை பெறச் சென்ற பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர் மயக்க ஊசி போட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News