இந்தியா

பரபரப்பாக காணப்படும் பீகார் மாநில ஆளுநர் அலுவலகம்: போலீசார் குவிப்பு

Published On 2024-01-28 05:19 GMT   |   Update On 2024-01-28 05:21 GMT
  • ஆளுநரைச் சந்திக்க முதல் மந்திரி நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளார் என தகவல் வெளியானது.
  • முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

பாட்னா:

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிதிஷ்குமாருக்கு, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மாநில கூட்டணியில் உள்ள ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிகளுடன் முரண்பாடு ஏற்பட்டது. இதனால் இந்தியா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளார் என தகவல் வெளியானது.

அதேபோல், மாநிலத்திலும் ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் உள்ள கூட்டணியில் இருந்தும் விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்தக் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல் மந்திரி பதவியேற்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். இதற்காக நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, பீகார் மாநில ஆளுநரைச் சந்திக்க முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று காலை நேரம் கேட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பீகார் மாநில ஆளுநர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News