இந்தியா

VIDEO: கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை - இடிந்து விழுந்த சிபிஎம் கட்சி அலுவலகம்

Published On 2025-06-18 07:52 IST   |   Update On 2025-06-18 07:52:00 IST
  • பலத்த மழை காரணமாக கேரளாவின் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
  • மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, பத்தினம் திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டுகிறது.

பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகம் இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

தினமும் குறைந்தது 10 பேர் இந்த அலுவலகத்தில் கேரம் விளையாட வரும் நிலையில், விபத்து அன்று யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News