இந்தியா
சர்ச்சைகளுக்கு மத்தியில் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த தேர்தல் ஆணையம்!
- 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது.
- தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் நாளை (ஆகஸ்ட் 17) பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகள், பீகார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது.
இந்நிலையில் நாளை செய்தியாளர்கள் சந்திப்பில் இவற்றை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.