இந்தியா

நேரடி ஒளிபரப்பு வேண்டாம்- பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்

Published On 2025-05-09 13:16 IST   |   Update On 2025-05-09 13:16:00 IST
  • பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை நேரலையில் காண்பித்தால் வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • தேசத்தின் சேவையில் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்தி, செய்தி சேகரிப்பில் விழிப்புணர்வு, உணர்திறன் மற்றும் பொறுப்பை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பாதுகாப்பு வீரர்களை பின்தொடர்ந்து நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனி நபர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை நேரலையில் காண்பித்தால் வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் தேசத்தின் சேவையில் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்தி, செய்தி சேகரிப்பில் விழிப்புணர்வு, உணர்திறன் மற்றும் பொறுப்பை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

மும்பை தாக்குதல், விமானக் கடத்தல், கார்கில் போர் சமயங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சகம் இவ்வாறு கூறியுள்ளது.

Tags:    

Similar News