இந்தியா

சி.பி.ஐ. வந்து ஷுக்களை எண்ணிக் கொள்ளட்டும் - பா.ஜ.க. எம்.பிக்கு பதிலடி கொடுத்த மஹுவா மொய்த்ரா

Published On 2023-11-08 17:15 IST   |   Update On 2023-11-08 17:29:00 IST
  • மஹுவா மொய்த்ரா மக்களவை நெறிமுறைக் குழு முன் நவம்பர் 2-ம் தேதி ஆஜராகி விளக்கமளித்தார்.
  • அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

புதுடெல்லி:

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக விசாரணைக் குழு அமைக்கவேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.

மக்களவைக்கு கேள்விகளை நேரடியாக பதிவிடுவதற்காக, பாராளுமன்ற இணையதளத்தை பயன்படுத்தும் உள்நுழைவு அனுமதியை தர்ஷன் ஹிராநந்தனிக்கு மஹுவா மொய்த்ரா வழங்கியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் புகார் மீது மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது.

மஹுவா மொய்த்ரா மக்களவை நெறிமுறைக் குழு முன் நவம்பர் 2-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இதற்கிடையே, மஹுவா மொய்த்ரா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி.யின் கருத்துக்கு பஹுவா மொய்த்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பஹுவா மொய்த்ரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது வீட்டுக்கு சிபிஐயின் வரவு நல்வரவு ஆகுக. அதானியை முதலில் விசாரிக்கட்டும், என்னிடம் உள்ள ஷுக்களை எண்ணிக் கொள்ளட்டும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News