பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை.. ஐ.பி.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு
- ஐபிஎஸ் ஆன பிறகு அப்பெண்ணை அந்த நபர் தவிர்த்தகத் தொடங்கியுள்ளார்.
- அந்த நபரின் பெற்றோரும் அந்தப் பெண்ணுக்கு பதிலளிக்கவில்லை.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக 30 வயது ஐபிஎஸ் அதிகாரி மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அந்த நபரை இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்து நண்பர் ஆகியுள்ளார். அப்போது அந்த பெண் எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருந்தார். அந்த நபர் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்தார்.
பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை அவருடன் அந்த நபர் உடல் ரீதியாக உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே அந்த நபர் யுபிஎஸ்சி தேர்வில் வென்று ஐபிஎஸ் அதிகாரி ஆனார். அந்த பெண்ணும் படிப்பை முடித்து மருத்துவர் ஆனார். ஐபிஎஸ் ஆன பிறகு அப்பெண்ணை அந்த நபர் தவிர்த்தகத் தொடங்கியுள்ளார். ஆனால் அந்த நபர் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.
அந்த நபரின் பெற்றோரும் அந்தப் பெண்ணுக்கு பதிலளிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் அடிப்படையில், ஐபிஎஸ் அதிகாரி மீது இன்று பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.