இந்தியா

யானை ஒருபோதும் நாயுடன் சண்டையிடாது: முன்னாள் பா.ஜ.க. எம்.பி. பேச்சு

Published On 2025-05-29 23:29 IST   |   Update On 2025-05-29 23:29:00 IST
  • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
  • சம உயரம் கொண்ட எதிரியுடன் போர் நடத்தப்படுகிறது என்றார் பா.ஜ.க. தலைவர்.

போபால்:

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் முன்னாள் எம்பியான பிரக்ஞா சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தான் இந்தியாவுடன் அளவு மற்றும் ராணுவ பலத்தில் பொருந்தவில்லை. சம உயரம் கொண்ட எதிரியுடன் போர் நடத்தப்படுகிறது.

பாகிஸ்தானின் வெடிமருந்துகளும் பயங்கரவாதிகளும் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் ஏவிய அனைத்து ஆயுதங்களும் இந்திய எல்லைக்கு வெளியே அழிக்கப்பட்டன. அவர்களால் ஒரு தாக்குதலைக் கூட நடத்த முடியவில்லை, இந்தியா அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது.

நீங்கள் ஏன் போரை நிறுத்தினீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்? போர் சமமானவர்களுக்கு இடையே நடைபெறுவது. யானை ஒருபோதும் நாயுடன் சண்டையிடாது என தெரிவித்தார்.

Tags:    

Similar News