இந்தியா

குஜராத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி தலா ஒரு தொகுதியில் வெற்றி

Published On 2025-06-23 13:46 IST   |   Update On 2025-06-23 13:46:00 IST
  • குஜராத் இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது.
  • குஜராத்தின் விஸ்வதார் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் இத்தாலியா கோபால் வெற்றி பெற்றார்.

குஜராத், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெற்றது.

குஜராத்தின் விஸ்வதார் மற்றும் காடி ஆகிய 2 தொகுதிகளுக்கும், கேரளாவின் நிலாம்பூர், மேற்கு வங்காளத்தின் காளிகஞ்ச், பஞ்சாபின் லூதியானா மேற்கு என மொத்தம் 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

குஜராத்தின் காடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை 39452 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாஜக வேட்பாளர் ராஜேந்திர குமார் வெற்றி பெற்றார்.

அதே சமயம் குஜராத்தின் விஸ்வதார் தொகுதியில் பாஜக வேட்பாளரை 17554 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆம் ஆத்மி வேட்பாளர் இத்தாலியா கோபால் வெற்றி பெற்றார்.

குஜராத் இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது.

Tags:    

Similar News