இந்தியா

தங்கை கண்முன்னே தந்தையை துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் அடைத்த மகன்.. NEET-க்கு படிக்க சொன்னதால் ஆத்திரம்

Published On 2026-02-24 18:21 IST   |   Update On 2026-02-24 18:21:00 IST
  • வீட்டில் தந்தை பிரதாப் சிங் உரிமம் பெற்று வாங்கி வைத்திருந்த ரைபிளை எடுத்து அவரை சுட்டுக் கொன்றார்.
  • விஷயத்தை வெளியே சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன் என தங்கையை அக்ஷத் மிரட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக் லக்னோவில் நீட் தேர்வு அழுத்தத்தால் 21 வயது இளைஞன் தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

லக்னோவின் ஆஷியானா பகுதியில் மருத்துவ பரிசோதனை மையம் நடத்தி வந்தவர் பிரதாப் சிங் (49). இவரது மனைவி கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் மகன் மற்றும் மகள் உடன் வசித்து வந்தார்.

தனது 21 வயது மகன் அக்ஷத்தை இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு படிக்க சொல்லி பிரதாப் சிங் அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி 20 அன்று வீட்டில் இருவரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அக்ஷத்தின் தங்கையும் அங்கு இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தை அடக்க முடியால் அக்ஷத், வீட்டில் தந்தை பிரதாப் சிங் உரிமம் பெற்று வாங்கி வைத்திருந்த ரைபிளை எடுத்து அவரை சுட்டுக் கொன்றார்.

மேலும் தங்களை கண் முன்னேயே உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். சில உடல் பாகங்களைச் சதரோனா கிராமம் அருகே வீசிவிட்டு, மீதமுள்ளவற்றை வீட்டில் இருந்த நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் மறைத்து வைத்துள்ளார்.

இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன் என தங்கையை அக்ஷத் மிரட்டியுள்ளார்.

பிரதாப் சிங்கை காணவில்லை என உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அக்ஷத்தின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

டிரம்மில் வைக்கப்பட்டிருந்த உடலின் பாகங்களை போலீசார் மீட்ட நிலையில் நேற்று அக்ஷத் கொலை வழக்கில் கைது செய்யபட்டார்.  

Tags:    

Similar News