இந்தியா

1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரெயில்வே காவல் அதிகாரிக்கு உயரிய விருது!

Published On 2026-01-18 14:51 IST   |   Update On 2026-01-18 14:51:00 IST
  • 2024-ல் 494 குழந்தைகளையும், 2025-ல் 1,032 குழந்தைகளையும் இவரது குழுவினர் மீட்டுள்ளனர்.
  • இதற்காகத் தகவல் தருபவர்களின் பெரிய Informers நெட்வொர்க்கையும் இவர் உருவாக்கி வைத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரெயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கௌரவிக்கப்பட்டது

லக்னோவின் சார்பாக் ரெயில் நிலையத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஆய்வாளர் சந்தனா சின்ஹா, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ளார்.

2024-ல் 494 குழந்தைகளையும், 2025-ல் 1,032 குழந்தைகளையும் இவரது குழுவினர் மீட்டுள்ளனர்.

நடைமேடைகளில் தனியாக இருக்கும் குழந்தைகள், கடத்தல்காரர்களுடன் இருப்பவர்களைக் கண்டறியும் விசேஷப் பயிற்சியை தனது குழுவினருக்கு இவர் வழங்கியுள்ளார்.

இதற்காகத் தகவல் தருபவர்களின் பெரிய Informers நெட்வொர்க்கையும் இவர் உருவாக்கி வைத்துள்ளார்.

பீகார் முதல் பஞ்சாப் மற்றும் அரியானா வரையிலான கடத்தல் பாதைகளைக் கண்காணித்து, குழந்தைத் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்ட பல குழந்தைகளை இவர் மீட்டுள்ளார். 

Tags:    

Similar News