இந்தியா

ஆந்திரா: ஏகாதசியை ஒட்டி கோவிலில் குவிந்த பக்தர்கள் - கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழப்பு

Published On 2025-11-01 13:09 IST   |   Update On 2025-11-01 13:09:00 IST
  • ஏகாதசி பண்டிகையை ஒட்டி கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
  • கூட்டநெரிசலில் சிக்கி சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏகாதசி பண்டிகையை ஒட்டி கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வரா கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெய்வத்தை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இவ்வாறு உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News