செய்திகள்

வாக்களிப்பதை செல்பி எடுத்த பாதுகாப்பு படை வீரரின் தபால் ஓட்டு தள்ளுபடி

Published On 2019-05-10 09:40 GMT   |   Update On 2019-05-10 09:40 GMT
சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிப்பதை செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த பாதுகாப்பு படை வீரரின் தபால் ஓட்டை தேர்தல் கமிஷன் தள்ளுபடி செய்தது. #LSPolls #Postalvote #CRPFSoldier
பெங்களூரு:

பாதுகாப்பு படைகளில் பணியாற்றுபவர்கள் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளுக்கு வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதால் அவரவர்களுக்கு வாக்குரிமை உள்ள தொகுதிகளில் முன்கூட்டியே அவர்கள் வாக்களித்துவிட்டு செல்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறது.

தபால் ஓட்டு என்றழைக்கப்படும் இந்த வாக்குகள்தான் வாக்கு எண்ணிக்கையின் முதல்சுற்றில் எண்ணப்படும். அவ்வகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் இருந்து பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு வீரர், சுயேட்சை வேட்பாளரும் நடிகையுமான சுமலதாவுக்கு தான் வாக்களித்த காட்சியை செல்பியாக எடுத்து  சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

இதற்கு சிலர் கண்டனம் தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக சிலர் தேர்தல் கமிஷனில் ஆதாரத்துடன் புகார் அளித்தனர். இதனடிப்பையில் நடவடிக்கை எடுத்த தேர்தல் கமிஷன், எண்ணிக்கையின்போது அந்நபரின் வாக்கை தள்ளுபடி செய்யுமாறு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. #LSPolls #Postalvote #CRPFSoldier #CRPFSoldierPostalvote  
Tags:    

Similar News