செய்திகள்

எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைத்தால் சனிக்கிழமைகளில் ஸ்டாலின் பிரதமர் - அமித் ஷா கிண்டல்

Published On 2019-01-30 10:14 GMT   |   Update On 2019-01-30 10:14 GMT
மத்தியில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்தால் வாரத்தின் 6 நாட்களில் 6 பேர் பிரதமர் பதவியை வகிப்பார்கள், சனிக்கிழமைகளில் ஸ்டாலின் பிரதமராக இருப்பார் என அமித் ஷா தெரிவித்துள்ளார். #StalinPM #SaturdayPM #AmitShah
லக்னோ:

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்.

மோடி ஆட்சியை வீழ்த்துவதற்காக கைகோர்த்துள்ள எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியை கேலி செய்யும் விதமாக இந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா, மத்தியில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்தால் வாரத்தின் 6 நாட்களில் 6 பேர் பிரதமர் பதவியை வகிப்பார்கள் என குறிப்பிட்டார்.


‘திங்கட்கிழமை மாயாவதி பிரதமராக இருப்பார், செவ்வாய்க்கிழமை அகிலேஷ் யாதவ், புதன்கிழமை மம்தா பானர்ஜி, வியாழக்கிழமை சரத்பவார், வெள்ளிக்கிழமை தேவேகவுடா, சனிக்கிழமை ஸ்டாலின் ஆகியோர் பிரதமர்களாக இருப்பார்கள்.

ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்த நாட்டுக்கும் விடுமுறை நாளாக அமைந்துவிடும்’ என பலத்த கரகோஷம் மற்றும் சிரிப்பலைகளுக்கு இடையில் அமித் ஷா தெரிவித்தார். #StalinPM #SaturdayPM #AmitShah 
Tags:    

Similar News